[ad_1]





”கனமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்” என தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.




தமிழகத்தில் பருவமழை தீவிரமடையும் இந்நேரத்தில், மழை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது. தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் மாளிகையின் 10-வது தளத்தில், இந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசுத்துறை செயலாளர்கள், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை பாதிப்புகள் தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டன. மேலும், வரவிருக்கும் பருவமழை தொடர்பான பாதிப்புகள், அதற்கு முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மக்களுக்கு அளிக்கவேண்டிய பாதுகாப்புகள்குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.


இந்நிலையில் இன்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “இதுவரையில் மழை, வெள்ளத்தால் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட மழையை சமாளிக்கவும் பாதிப்புகளை தடுக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், கனமழை, புயல், வெள்ளம் போன்றவற்றை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது” என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்