[ad_1]





Chennai: நடிகர் கமல்ஹாசனின் புகைப்படத்தை சிறுவன் ஒருவன் கத்தியால் குத்துவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் சடந்த சில மாதங்களாகவே, அரசியல் குறித்து கருத்து கூறி வருகிறார். சீக்கிரமே கட்சி தொடங்கப் போவதாகவும் அறிவித்து வருகிறார். தனது கருத்துகளை ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் தனது ட்விட்டர் மூலம் தெரிவிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கமல். கடந்த சில நாள்களுக்கு முன் `இந்து தீவிரவாதம் இல்லையென இனியும் சொல்ல முடியாது' என்ற கருத்தைக் கூறினார் கமல். இது குறித்து இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 




இந்நிலையில், சிறுவன் ஒருவன் கத்தியால் கமலின் புகைப்படத்தைக் குத்துவது போல ஒரு வீடியோ இணையத்தில் உலவியது. கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடீயோவை பகிர்ந்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், `என் பிள்ளைகள். அய்யகோ! ஒரு பிள்ளை எனை குத்திச்சாவதே மேல். என் வளர்ந்த சகோதரன் குற்றவாளியாய் தமிழ் பேசிக் குற்றம் ஏற்பதை தமிழ் இனம் சகியாது. இயற்க்கை எனைக் கொன்றே மகிழும். அதன் முன் மகிழ உமக்கும் உரிமை உண்டு. கொன்றுதான் பாரும். வென்றே தீர்வேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");