[ad_1]
ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தப்பட்ட தோட்டா கடலோரக்காவல் படைக்குச் சொந்தமானது இல்லை என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்ததையடுத்து, மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்கள் மீது கடந்த 13-ம் தேதி கடலோரக்காவல் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் பிச்சை, ஜான்சன் ஆகிய மீனவர்களுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. இந்தியக் கடலோரக் காவல்படைக்கு எதிராகக் கடும் கண்டனங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, கடலோரக் காவல்படையினர் நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தனர். ராமேஸ்வரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மீனவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.
இந்நிலையில், இன்று சென்னை வந்த மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், “மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய தோட்டா கடலோரக் காவல் படையுடையது அல்ல” என்றார்.
அவருடைய இந்தப் பேட்டி பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. எனில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்ற கேள்வி எழுந்தது. கடலோரக்காவல் படைத் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லையென்றால் முன்பு எதற்கு அவர்கள் மீனவர்களிடம் வருத்தம் தெரிவித்தார்கள். சரி அவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லையெனில் தோட்டா எங்கிருந்து வந்தது. அங்கீகாரம் இல்லாத துப்பாக்கிகளை கடலோரக் காவல் படையினர் பயன்படுத்துகிறார்களா... என்றெல்லாம் கேள்விகள் உருவாகியுள்ளன.
இந்நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பேட்டி குறித்த செய்தியைத் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, “ரப்பர் குண்டுகள் சட்டம் ஒழுங்கு பராமரிக்கும் காவல்துறையிடம்தான் இருக்கும். ராணுவம் மற்றும் துணை ராணுவத்திடம் இருக்காது” என்ற புதுகுண்டைத் தூக்கிப்போட்டுள்ளார்.
சுட்டது யார்... புதுக்குழப்பம்... ஹெச்.ராஜா விளக்கம்
TAGS :
COMMENTS