[ad_1]
தமிழகத்தில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் புறநகரில் மழையின் பாதிப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில், தாம்பரம் வரதராஜபுரம் மஹாலட்சுமி நகரில், வெள்ளம் பாதித்த பகுதிகளை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
அதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், `நீர் நிலைகளை ஆழப்படுத்தி, கரைகளைப் பலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். மழைநீர் வடிகால் பணிகள் எதுவுமே இப்பகுதியில் நடைபெறவில்லை. இந்த இடத்தில், பல ஆக்கிரமிப்புக் கட்டடங்கள் இருக்கின்றன. ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டும் அந்தப் பணிகளை மேற்கொள்ளாதது ஏன்? மழை நீர் வடிகால் பணிக்கு ஒதுக்கப்பட்ட 19 கோடி ரூபாய் நிதி என்னவானது?' என்று பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.
நீர் வடிகால் பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்னவானது..? - மு.க.ஸ்டாலின் சீற்றம்!
TAGS :
COMMENTS