[ad_1]
Chennai: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் தேதி நாளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் 3-வது வாரத்தில் தொடங்கி டிசம்பர் 3-ம் வாரம் வரை நீடிக்கும். குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை டிசம்பர் மாதத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி இதைக் கடுமையாகக் குறைகூறி வருகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “குளிர்காலக் கூட்டத்தொடரைச் சீர்குலைக்க மத்திய பா.ஜ.க அரசு சதி செய்கிறது” எனக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அனந்தகுமார், “சட்டப்பேரவை தேர்தல்கள் நடக்கும்போது, நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மாற்றியமைக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும் இதுபோன்று நடந்துள்ளது” என்றார். இதையடுத்து, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை உடனடியாகக் கூட்ட உத்தரவிடக்கோரி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு காங்கிரஸ் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கும் தேதியை முடிவு செய்வதற்காக நாளை நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை காலை 10 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் கூட்டத்தொடருக்கான அட்டவணை மற்றும் நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் எப்போது. நாளை அறிவிப்பு வெளியாகிறது
TAGS :
COMMENTS