[ad_1]
கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று விஷால் தெரிவித்துள்ளார்.
நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன் மேனஜேர் பா.அஷோக் குமார் இன்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் சசிகுமாரின் உறவினரும் ஆவார். கந்துவட்டி கொடுமையின் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் திரைப்படத்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்தவிவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால், 'கந்துவட்டி அடாவடி கும்பலின் அச்சுறுத்தலுக்கும் மிரட்டலுக்கும் இன்று தயாரிப்பாளர் அசோக் குமார் பலியானார் என்பதை அறிந்ததும் கடும் வேதனை அடைந்தேன். தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்த பின்னர் இதுபோல சிக்கல்களில் மாட்டிக்கொள்ளும் தயாரிப்பாளர்களை மீட்டெடுத்து அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பும் ஆதரவும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
எந்த ஒரு பிரச்னைக்குமே தற்கொலை தீர்வாகாது. கந்துவட்டி கும்பலின் மிரட்டலுக்கு ஆளாகும் தயாரிப்பாளர்கள் உடனடியாக சங்கத்தை அணுகினால் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி காப்பாற்ற தயாராக இருக்கிறோம். விரைவில் இந்தக் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம். தயாரிப்பாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சக தயாரிப்பாளர்கள் பிரச்னை இல்லாமல் தொழில் புரிய கூடிய சூழ்நிலை உருவாகத் தான் பாடுபடுக்கொண்டிருக்கிறோம்.
எந்தவித அச்சுறுத்தலோ மிரட்டலோ இருந்தால் உடனடியாக எங்களை அணுகவும். காவல்துறைக்கு ஒரு வேண்டுகோள். இது தற்கொலைஅல்ல. கொலை. இந்த சம்பவத்துக்கு காரணமான அனைவரையும் உடனடியாக காவல்துறை கைது செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று குறிப்பிடுள்ளார்.
கந்துவட்டி கொடுமைக்கு முடிவு கட்டுவோம்..! தயாரிப்பாளர்களுக்கு விஷால் அழைப்பு
TAGS :
COMMENTS