[ad_1]





கடலூர் மாவட்டம் திட்டகுடி பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் வழிபறியில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்த டெல்டா பிரிவு போலீஸாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

  


 


நவம்பர் 14-ம் தேதி, கடலூர் மாவட்டம் திட்டக்குடி தாலுக்காவான பெண்ணாடம், ஆவினங்குடி, திட்டக்குடி, சிறுபாக்கம், வேப்பூர் மற்றும் ராமநத்தம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் நகை மற்றும் தாலி செயின் பறிப்பு, தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் 10 பேரை ராமநத்தம் போலீஸார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் தொடர் விசாரனை செய்ததில், புதுச்சேரி தவளக்குப்பத்தைச் சேர்ந்த ஆனந்தராமன் என்கின்ற அருள், பிரேம்குமார், முருகானந்தம், விஜய், ஜெய்பிரகாஷ், இசக்கிமுத்து மற்றும் கார்த்திகேயன், சூர்யா, பூவராகன் ஆகியோர் என்று தெரியவந்தது. அவர்களை கைது செய்து திட்டக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் ராமநத்தம் போலீஸார். இவர்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், 2 விலை உயர்ந்த செல்போன்கள் மற்றும் கத்தி ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆணிமுத்துவை போலீஸார் தேடிவருகின்றனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளை விரைவாக கைது செய்த டெல்டா பிரிவு சிறப்பு உதவியாளர் நடராஜன் மற்றும் அவரது குழுவினர் மற்றும் சைபர் செல் பிரிவு  உதவி ஆய்வாளர் அமலா மற்றும் அவரது குழுவினரின் துரித பணியை பாராட்டி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அவர்களுக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார்.
           
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");