[ad_1]
கோவை, பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை வடவள்ளியை அடுத்த நவாவூர் பகுதியைச் சேர்ந்தவர், ஸ்ரீ லட்சுமி பிரபா. பயோ டெக்னாலஜி பாடப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் கணபதி மீது கொடுத்த புகாரின் பேரில், அவர்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்ரீ லட்சுமி பிரபா கூறியதாவது, " நான், கடந்த ஆண்டு கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தேன். அந்த பதவிக்கான அனைத்து முன்னுரிமைகள் எனக்கு இருந்தும், எனக்கு அந்தப் பணி வழங்கப்படவில்லை. அதுமட்டுமில்லை. அதற்குத் தகுதியான நபரை நியமித்தார்களா என்றால் அதுவும் இல்லை. அந்தப் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவி. ஒரு பெண்ணை நியமிக்கவேண்டிய இடத்தில் விதிகளை மீறி ஒரு ஆண் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விதிமீறல்குறித்து உச்ச நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்தேன். இவர்களை எதிர்த்து வழக்குப் போட்டதால் கோபமான துணைவேந்தர், எனக்கு தொடர்ந்து மனரீதியான தொல்லைகள் கொடுக்கிறார். எனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர விடாமல் இடையூறுசெய்கிறார்.
பல்கலைக்கழக மானியக் குழுவில் நான் ஆராய்ச்சிப் படிப்புக்குத் தேர்வுசெய்யப்பட்ட நிலையிலும் எனக்கான ஆவணங்களை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். இதனால், எனக்கு கிடைக்கவேண்டிய உதவித் தொகையை என்னால் பெற முடியவில்லை. எனது ஆராய்ச்சிப் படிப்பையும் தொடர முடியவில்லை. அதுமட்டுமல்லாது, பல்கலைக்கழகத்தில் டிரைவராக இருந்த என் கணவரையும் வேலையிலிருந்து தூக்கிவிட்டார்கள். இப்படிப் பல டார்ச்சர்கள் கொடுக்கிறார்கள். அதனால்தான், அவர்மீது புகார் கொடுத்துள்ளேன் என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பாரதியார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகார்!
TAGS :
COMMENTS