[ad_1]



அமெரிக்காவின் முக்கிய மாகாணமான நியூஜெர்சி, ஹொபோகென் நகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ரவீந்தர் பல்லா என்ற சீக்கியர். ஹொபோகென் நகரின் மேயராக சீக்கியர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல்முறை. அங்கு நிலவிய கடும் போட்டிகளுக்கு இடையே வெற்றி பெற்றுள்ளார் ரவீந்தர் பல்லா. இதற்குமுன் அங்கு மேயராக பதவி வகித்துவந்த டான் ஜிம்மர்தான், ரவீந்தரை மேயர் பதவிக்கு முன்மொழிந்துள்ளார்.



கலிஃபோர்னியா பல்கலையில் பி.ஏ. பொருளாதார உளவியல் பட்டமும், லண்டனில் எம்.எஸ்.சி. பொது நிர்வாக பட்டமும், லூசியானா டுலானே சட்டப்பள்ளியில் ‘ஜூரிஸ்’ கவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார் ரவீந்தர் பல்லா. நியூஜெர்சி, நியூயார்க் மாகாணங்களில் உள்ள நீதிமன்றங்களில் நடுவராக பணியாற்றியிருக்கிறார். அங்குள்ள நகர கவுன்சிலில் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக உறுப்பினராக இருந்துவந்துள்ளார். வெற்றி பெற்றதாக ரவீந்தர் அறிவிக்கப்பட்டதற்குப் பின்னர் மக்களிடம் உரையாற்றிய அவர், “உங்கள் மேயராக பணியாற்றக் காத்திருக்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்ததற்கு மிக்க நன்றி. நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியம். அப்போதுதான் இந்த நகரத்தை முன்னெற்றப் பாதையில் நகர்த்த முடியும்” என்றார்.