[ad_1]





மழையால் வீட்டுக்குள் ஒதுங்கிய மண்ணுளி பாம்பை மீட்ட ராமேஸ்வரம் தீயணைப்புத் துறையினர் அதனை பத்திரமாக வனப்பகுதிக்குள் அனுப்பி வைத்தனர்.

ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ளது ஆத்திகாடு கிராமம். இங்குள்ள மீனவர் குடியிருப்புப் பகுதியில் சிக்கந்தர் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வாசல் வழியாக வந்த மண்ணுளி பாம்பு மழைக்காக வீட்டிற்குள் ஒதுங்கியுள்ளது.





இதனை கண்ட சிக்கந்தரும் அவரது குடும்பத்தினரும் பயத்தில் வீட்டைவிட்டு வெளியேறிய நிலையில் ராமேஸ்வரம் தீயணைப்புத்  துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, தீயணைப்பு நிலைய அதிகாரி கேசவதாசன் தலைமையில் சென்ற தீயணைப்புப் படையினர் சிக்கந்தர் வீட்டிற்குள் நுழைந்த சுமார் 4 அடி நீளம் கொண்ட அந்த அழையா விருந்தாளியான மண்ணுளி பாம்பினை லாகவமாக பிடித்து சாக்கு பையில் எடுத்து வந்தனர். பின்னர், அந்த மண்ணுளி பாம்பை தீயணைப்புத் துறை வீரர்கள் ராமேஸ்வரம் நம்புநாயகி அம்மன் கோயில் பகுதியில் உள்ள சவுக்கு மரங்கள் நிறைந்த வனப் பகுதிக்குள் பாதுகாப்பாக விட்டு வந்தனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்