[ad_1]
Coimbatore: நடிகர் ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது மேட்டுப்பாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இயக்குநர் பாலா இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள படம் நாச்சியார். இந்தப் படத்தின் பெயர் வெளியானதில் இருந்தே சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனிடையே, இந்தப்படத்தின் டீசர் யூடியூப்பில் வெளியாகியுள்ளதுது. அந்த டீசரில் காவல்துறை அதிகாரியாக வரும் நடிகை ஜோதிகா, பெண் கைதியை காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கும் காட்சிகளில், பெண்களை இழிவுபடுத்தும் வகையில் தகாத வார்த்தைகளால் தாக்கிப் பேசும் வகையில் வசனங்கள் அமைந்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.
இது பெண் சமூகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும் ,இது சட்டத்துக்கு புறம்பான வசனமாகவும் தண்டனைக்குரிய செயலாகவும் இருப்பதால் ஜோதிகா மற்றும் இயக்குநர் பாலா மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 294 பி மற்றும் தகவல் தொழில் நுட்ப சட்டப்பிரிவு 67கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி, மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ராஜன் என்பவர் சார்பில் மேட்டுப்பாளையம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டுள்ளது.
இந்த மனு வரும் 28-ம் தேதி விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
நாச்சியார் பட விவகாரம்: பாலா மற்றும் ஜோதிகா மீது வழக்கு!
TAGS :
COMMENTS