[ad_1]





மத்திய பி.ஜே.பி அரசு இன்றைக்கு கல்விக் கடன் வழங்குவதில் அக்கறை இல்லாத அரசாக இருக்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டினார்.





சிவகங்கையில் கவிஞர் இலக்கியா நடராஜன் மகள் திருமண விழா முத்து மகாலில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சிதம்பரம், "மிகப்பெரிய செல்வந்தராக இருக்கலாம்; நிறைய பணம் வைத்திருக்கலாம்; ஆனால், இவற்றைவிட  கல்விதான் மிகப்பெரிய சொத்து. கடந்த பத்து பதினைந்து ஆண்டுகளாக மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கினோம். ஏராளமான ஏழை, நடுத்தரமான மக்களின் பிள்ளைகள் உயர்ந்த கல்வி பயின்று இன்றைக்கு உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதில் பெருமையாக இருக்கிறது. இதை தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது. உயர்ந்த நிலைக்குப் போன மாணவர்கள் என்னிடம் வந்து கல்விக் கடன் பெற்று படித்ததால்தான் இந்த உயர்ந்த பதவிக்கு வரமுடிந்தது என்று என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.ஆனால், தற்போது இருக்கக்கூடிய மத்திய அரசாங்கம் கல்விக்கடன் வழங்குவதில் அக்கறை காட்டவில்லை. அதேபோன்று வங்கிகளும் இருக்கிறது. கல்வியில் முதல் தலைமுறையினர் வங்கியில் கல்விக்கடன் பெற்று, பட்டம் பயின்று, உயர் கல்வி பெற்றார்கள். ஆனால், இன்றைக்கு அவர்கள் கல்வி கற்க பணம் ஒரு தடையாக இருக்கிறது. கல்விக்கடன் வழங்காதது வேதனையாக இருக்கிறது. எனவே, கல்வியின் முதல் தலைமுறையின் கனவு நசுக்கப்படுகிறது. இதுபோன்ற நிலை இந்தியாவுக்கு இழிவானதாகும் என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");