[ad_1]

";இந்திரா காந்தியால் தீவிர அரசியலுக்கு வந்தவன் நான்” என இந்திரா காந்தி நூற்றாண்டு விழாவின் ஸ்டாலின் தன் அரசியல் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.



இந்திரா காந்தி நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம், கோவை சிவானந்தா காலனியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா.பாண்டியன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி, தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ மற்றும் எஸ்.டி.பி.ஐ, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், “மத்தியில் மதச்சார்பற்ற ஆட்சி அமைய நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும். ஒரு வகையில் நான் தீவிர அரசியலுக்கு வர காரணமானவர் இந்திரா காந்தி. இன்றைய சூழலில் மாநிலத்தின் உரிமையை தமிழகம் இழந்து வருகிறது. இந்த நிலையை மாற்ற நாம் அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்” என்றார்.