[ad_1]
கடலூர் மாவட்டத்தில் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவனங்கள் சில கைப்பற்றப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
தமிழகம் முழுவதும் சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரன் தொடர்புடைய 80-க்கும் அதிகமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன்படி, புதுவை ஓசன் ஸ்பிரே ஓட்டல் உரிமையாளர் நவின் பாலாஜிக்கு சொந்தமான லஷ்மி ஜீவல்லரியில் நான்கு பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவும், அதேபோல், கடலூர் கூத்தப்பாக்கத்தில் உள்ள தினகரனின் ஆஸ்த்தான ஜோதிடரான சந்திரசேகர் வீட்டில் ஐந்து பேர் கொண்ட வருமான வரித்துறை குழுவும் சோதனை நடத்தினர். சிதம்பரத்தில், சுமார் ஐந்து மணி நேரத்திற்க்கும் மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஒரு சில ஆவனங்கள் கைப்பெற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடலூரில் தொடர்ந்து சோதனை நடைபெற்றுவருகிறது.
இதுவரை தமிழகத்தில் இத்தனை இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடந்ததில்லை. கருப்பு பணம் ஒழிப்புக்குத்தான் இந்த சோதனை என்று அதிகாரிகள் கூறினாலும், உண்மையில் தினகரனை கட்டம் கட்டத்தான் இந்தச் சோதனை. அதனால்தான், உறவினர் மற்றும் அவரோடு தொழில் சம்பந்தமான நபர்களை குறிவைத்து சோதனை நடத்தியுள்ளனர். குறிப்பாக, சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடி சந்திப்புக்கு பிறகு இச்சோதனை என்பது பெருத்த சந்தேகத்தை ஏற்ப்படுத்தியிருக்கிறது" என்கிறார்கள் தினகரன் அணியினர்.
கடலூரில் தினகரனுக்கு நெருக்கமானவர்கள் இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை!
TAGS :
COMMENTS