[ad_1]





கடந்த வெள்ளிக் கிழமையன்று வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் படம் `அறம்'. இந்தப் படத்தில் நயன்தாரா மதிவதனி என்ற கதாபாத்திரத்தில் கலெக்டராக நடித்துள்ளார். இப்படத்தினை கோபி நயினார் இயக்கியுள்ளார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி பத்திரிகைகளாலும், திரை விமர்சகர்களினாலும் பெரிதும் பாராட்டைப் பெற்றிருக்கும் இப்படத்திற்கு மேலும் ஒரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மதுரையிலுள்ள எவிடென்ஸ் அமைப்பு இப்படத்திற்கு இந்த ஆண்டிற்கான  'சமூக மாற்றத்திற்கான படைப்பு விருது' வழங்கியுள்ளது. இதனை எவிடென்ஸ் அமைப்பின் கதிர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.




அவரது பதிவில், "சிறந்த சமூக மாற்றத்திற்கான படைப்பு விருதினை இந்த வருடம் அறம் படத்திற்கு எவிடென்ஸ் அமைப்பு வழங்க இருக்கிறது.அதன் இயக்குனர் கோபி நயினார் அவர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் மற்றும் விருது வழங்கப்பட இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்து கொள்ளுகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார். திரைப்படம் வெளியாகி இரண்டு தினங்களே ஆகியுள்ள நிலையில் இந்த விருது அறிவிக்கப்ட்டுள்ளது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்