[ad_1]





கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகேயுள்ள மத்தம், பாலை மற்றும் பளுகல் பகுதிகளில் நிர்மல் கிருஷ்ணா என்கிற நிதி நிறுவனம் நடத்தி அதில் சுமார் 600 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக நிதி நிறுவன அதிபர் நிர்மலன் மீது சுமார் 4000-க்கும் மேற்ப்பட்ட புகார்கள் வந்தது. அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரால் தேடப்பட்டு வந்த நிர்மலன் தலைமறைவானார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மதுரையில் உள்ள முதலீட்டாளர்கள் நலச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீரா சுமதி முன்னிலையில் நிர்மலன் சரணடைந்தார் .




அதனைத்தொடர்ந்து, வரும் 29-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் நிர்மலனை வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்பின் நிர்மலன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நிதி நிறுவன அதிபர் நிர்மலனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதிக்குமாறு கன்னியாகுமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி பால்துரை தலைமையிலான போலீஸார் மதுரை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் மொத்தம் 12 நாள்கள் காவலில் விசாரிக்க அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் நீதிபதி மீரா சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நிர்மலனுக்கு 5 நாள் போலீஸ் காவல் கொடுத்து உத்தரவிட்டார். அதன்பின் நேற்றிரவு மதுரை சிறையில் இருந்து டிஎஸ்பி பால்துரை தலைமையிலான போலீஸார் காவலில் எடுத்தனர். நிர்மலனை இரவு 11 மணிக்கு நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். பொருளாதார பிரிவு போலீஸ் ஸ்டேஷனில் நிர்மலனை வைத்துவிட்டு மீண்டும் அவரை ரகசிய இடத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தனக்கு சோர்வாக இருப்பதாக நிர்மலனை  கூறியதைத் தொடர்ந்து காலையில் அவரிடம் விசாரணையைத் தொடங்கினர்.  போலீஸார் நிதி நிறுவன மோசடியில் நிர்மலன் உட்பட 18 பேர் சேர்த்துள்ளனர்.




நிர்மலனை சேர்த்து 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. நிர்மலன் ஏற்கெனவே, `தான் நீதிமன்றத்தில் எல்லா விவரங்களையும் தெரிவித்துள்ளதாகவும் தன்னுடைய முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பி கொடுக்கும் வகையில் சொத்து உள்ளது. நான் யாரையும் ஏமாற்றவில்லை. அடகு நகைகளை எடுத்துக்கொண்டு நான் தலைமறைவாகவில்லை' என்று தெரிவித்துள்ளார். நிர்மலனிடம் இருக்கும் சொத்துக்கள் பற்றிய விபரங்களை போலீஸார் விசாரித்து வருகின்றனர். நீதிமன்ற உத்தரவுபடி ஒரு நாளில் அரை மணி நேரம் நிர்மலன் தனது வழக்கறிஞருடன் பேசிக் கொள்ளலாம் என்கிற சலுகையும் வழங்கப் பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");