[ad_1]





Karur: 

கோடி கோடியாகப் பணம் வைத்திருப்பவர்களுக்கும் கைகால்கள் நன்றாக இருப்பவர்களுக்கும்கூட அடுத்தவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்லெண்ணம் அருகிப்போய்விட்ட காலம் இது. ஆனால்,100 நாள் வேலைக்கு கூலிக்குப் போய், அதில் கிடைக்கும் கூலிப் பணத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பேனா, பென்சில், புத்தகங்கள் என்று வாங்கித் தருகிறார் நாகராஜன் என்பவர். இப்போது தனது ஊரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உள்ள குழந்தைகள் அமர பத்துக்கும் மேற்பட்ட பாய்களை வாங்கி வழங்கியிருக்கிறார் அவர். இப்படி 'கல்வி' விசயத்துக்கு தனது கூலி வேலை சம்பளம் அவ்வளவையும் வாரி வழங்கும் நாகராஜன் ஒரு மாற்றுத்திறனாளி.
 



 

நாகராஜனிடமே பேசினோம்,

"நான் மாற்றுத்திறனாளியா பிறந்ததால, என்னை வீட்டுல கண்டுக்கலை. அதோட, படிக்கணும் எனக்கிருந்த ஆசைக்கு எனது பெற்றோர் உதவலை. அதனால், மனசுக்குள்ள படிக்கலையேங்கிற ஏக்கம் எனக்கு நிரம்பிக் கிடக்கு. நான் படிச்சுருந்தா, மாற்றுத்திறனாளியான நான் நல்ல வேலைக்குப் போய் நல்ல நிலைமைக்கு வந்திருப்பேன். ஆனால், அந்த வாய்ப்பு எனக்கு கிட்டலை. என்னைப்போல மற்றவர்களும் இருந்துவிடக் கூடாது. படிப்பு வாசனை அற்றவர்களாக மாற்றப்பட்டிருக்கக் கூடாது என்று எண்ணத்தில், கூலி வேலைக்குப் போய் கல்விக்காக மாணவர்களுக்கு உதவணும்னு முடிவு பண்ணி கடந்த ஐந்து வருடங்களாக இப்படி செயல்பட்டுட்டு வருகிறேன். எங்க கரூர் மாவட்டம் பின்தங்கிய மாவட்டம். அன்றாடங்காய்ச்சிகள், படிப்பறிவற்றவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம். அதனால், அவர்கள் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும். சிறப்பான எதிர்காலத்தை அவர்களுக்கு உருவாக்கித் தர வேண்டும் என்று நினைப்பதைவிட, தங்களைப்போல கூலி வேலைக்குப் போய் காசு சம்பாதிக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அதற்கு காரணம், பிள்ளைகளைப் படிக்க வைக்க ஆகும் செலவுகளால்தான் அப்படிப் பண்ணுகிறார்கள்.


அதனால்தான், நான் ஐந்து வருடமாகக் கூலி வேலை பார்த்து, 100 நாள் வேலைக்குப் போய் படிக்க வசதியில்லாத மாணவர்களைத் தேடி கண்டுபிடித்து, புத்தகங்கள், சீருடைகள், பேக்குகள், கல்வி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் என்று என்னால் முடிந்த அளவு வாங்கிக் கொடுக்கிறேன். இந்த நிலைமையில்தான், எங்க சொந்த ஊரான கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் உள்ள கள்ளப்பள்ளியில் இயங்கி வரும் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகள் தரையில் அமர்ந்து இருக்கும் அவலம் நடந்தது. இது மழைக்காலம். தரை முழுக்க ஈரம் கோத்துக் கிடக்கும். அதில் அமரும் குழந்தைகளுக்குச் சளி, ஜூரம்னு வர வாய்ப்பிருக்கு. அதனால், 100 நாள் வேலைக்குப் போய் நான் சம்பாதித்த பணத்தில் 10 பாய்களை வாங்கி அந்த அங்கன்வாடி மையத்துக்கு வழங்கி இருக்கிறேன். என் உயிர் இருக்கும் வரை இப்படி கூலி வேலை செஞ்சு, எங்க மாவட்டம் முழுக்க உள்ள ஏழை மாணவர்கள் கல்வி அறிவு பெற வேண்டி உதவி செய்யணும் என்று நினைத்திருக்கிறேன். நான் படிக்காத படிப்பை ஏழை மாணவர்கள் பெறட்டுமே சார். அவர்கள் படித்தால் நான் படித்த மாதிரி சந்தோஷம் கிடைக்கும். அது போதும் சார் இந்த ஜென்மத்துக்கு!" என்கிறார் நெக்குருகிப்போய்!.
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");