[ad_1]





தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்.பி-க்கள் மூன்று பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. 




அடுத்த மாதம், 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதல் நினைவு நாள் வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்படலாம் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து சென்னை, பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்துக்கு தினகரன் அணியில் இருக்கும் மூன்று மாநிலங்களவை எம்.பி-க்களான விஜிலா சத்தியானந்த், நவநீதகிருஷ்ணன், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்துள்ளனர். இதனால், அவர்கள் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. 
 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");