[ad_1]
'வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கும் விஷயம்' என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கவலை தெரிவித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில், இன்று ஒரு வழக்கு விசாரணையின்போது நீதிபதி கிருபாகரன், “வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்கின்றனர். இதைத் தடுக்காவிட்டால், வழக்கறிஞர் தொழிலை நம்மால் காப்பாற்ற முடியாது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். சில வழக்கறிஞர்கள் கல்லூரிக்கே செல்லாமல் சட்டம் படித்துவிடுகிறார்கள். அதனால்தான் கட்டப்பஞ்சாயத்து அதிகமானது” என்றார். வழக்கறிஞர்கள் பற்றி நீதிபதி ஒருவரே இத்தகைய கருத்தைக் கூறியிருப்பது விவாதமாகி இருக்கிறது.
கட்டப்பஞ்சாயத்து செய்யும் வழக்கறிஞர்கள்! - உயர் நீதிமன்ற நீதிபதி கவலை
TAGS :
COMMENTS