[ad_1]
பிரபல கார்ட்டூனிஸ்ட் பாலா, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அம்மனுவில், " நான் சென்னையில் வசித்துவருகிறேன். 23.10.17 அன்று ,நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் இசக்கிமுத்து குடும்பத்தார் தீக்குளித்துப் பலியாகினர்.இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அக்டோபர் 24ம் தேதி, ஒரு கார்ட்டூன் வரைந்து, என்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டேன். அதில் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் அரை நிர்வாண கோலத்தில் நின்று தீக்குளிப்பு சம்பவத்தைப் பார்ப்பது போல சித்திரித்திருந்தேன். இந்த நிலையில், நெல்லை மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் பேரில் என் மீது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000-ன்படி வழக்குப்பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து, நவம்பர் 5-ம் தேதி சென்னைக்கு வந்த நெல்லை மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர், என்னை இந்த வழக்கு தொடர்பாகக் கைது செய்தார். இந்த வழக்கின்படி நான் எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை. எனவே, என்மீது காவல்துறையினர் பதிந்துள்ள வழக்கை ரத்துசெய்ய வேண்டும்'' என்று பாலமுருகன் என்ற கார்டூனிஸ்ட் பாலா தனது மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை காவல் துறையினர் விசாரிக்க இடைக்காலத் தடை விதித்தும், இது சம்பந்தமாக நெல்லை மாநகர காவல்துறை ஆணையாளர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு, மனுமீதான விசாரணையை நவம்பர் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
கார்ட்டூனிஸ்ட் பாலா மீதான வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
TAGS :
COMMENTS