[ad_1]
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில், பா.ஜ.க. கொடியை எரிக்க முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியானது தொடர்ந்து பா.ஜ.க-க்கு எதிராக செயல்பட்டு வருகிறது என்றும், கம்யூனிஸ்ட் கட்சியானது இந்தியாவிலேயே இருக்ககூடாது என்றும் நேற்று இரவு சென்னையில் பா.ஜ.க.வினர், கம்யூனிஸ்ட் கட்சி கொடியையும், அம்மாநில முதல்வர் பினராய் கொடும்பாவியையும் எரித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து, கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியினர், "தமிழகத்தில் பா.ஜ.க. மாணவர் அமைப்பை தடை செய்யவேண்டும். கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கவேண்டும். சென்னையில் கம்யூனிஸ்ட் கட்சிக் கொடியை எரித்த குண்டர்களை உடனடியாக கைது செய்யவேண்டும்" என்று பா.ஜ.க.வுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி, பா.ஜ.க. கட்சி கொடியை எரிக்க முயன்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக கொடியை எரித்த கம்யூனிஸ்ட் கட்சியினருடன் மல்லுக்கட்டிய போலீஸ்
TAGS :
COMMENTS