[ad_1]





'மத்திய அரசுக்கு எதிராக நவம்பர் 20-ம் தேதி, டெல்லி ராம் லீலா மைதானத்தில் போட்டி பாராளுமன்றக் கூட்டம் நடத்தப்படும்' என்று தமிழக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.


    



இதுகுறித்து, கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பாசன சங்கங்களின் விவசாயிகளின் கூட்டமைப்புத் தலைவர் இளங்கீரன், "தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, "நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்தி, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி கொடுத்தார். அவர் வெற்றிபெற்று, ஆட்சிப் பொறுப்பேற்று பதவிக்காலமே முடியப்போகிறது. இதுவரை அதற்கான எந்த முயற்சியையும் அவர் எடுக்கவில்லை. மாறாக, விவசாயிகளைப் பிச்சை எடுக்கவைத்தார், விவசாயிகள்மீது போலீஸை ஏவிவிட்டு, அவர்களை அடித்தொழித்தார். விவசாயிகளின் நலனில் அக்கரை காட்டாமல், அம்பானி, அதானி போன்ற பண முதலைகளின் நலனில் மட்டுமே அவர் அக்கரை காட்டிவருகிறார். அதற்காகத்தான் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முந்தைய நாள், இந்தியாவில் உள்ள சுமார் 400 விவசாய சங்கங்களின் மூலம் விவசாயிகளை ஒன்றிணைத்து, போட்டி பாராளுமன்ற கூட்டத்தை டெல்லியில் நடத்த உள்ளோம்.விவசாயிகளின் கடனைத் தள்ளுபடிசெய்யாமல், முழுமையாக அந்தக் கடனிலிருந்து அவர்களை விடுதலைசெய்ய வேண்டும். உற்பத்திச் செலவுடன் வாழ்க்கைச் செலவு 50 சதவிகிதம் விலை நிர்ணயம் என்னும் தேசிய விவசாயிகள் கமிஷனின் பரிந்துரையை சட்டபூர்வமாக உரிமையாக்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதான் இந்தப் போட்டி பாராளுமன்றக் கூட்டம். இதில் இந்தியாவே ஸ்தம்பித்துப்போகும் வகையில் விவசாயிகள் கூடுவார்கள்" என்றார் அவர்.
                              
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்