[ad_1]

” 'பத்மாவதி' திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று பரவும் புரளியில் உண்மையில்லை” என திரைப்படத் தயாரிப்பாளர் அஜித் அந்தாரே அறிவித்துள்ளார்.



பாலிவுட்டின் லேட்டஸ்ட் வைரல், நடிகை தீபிகா படுகோன் நடித்து வெளியாக இருக்கும் ’பத்மாவதி’ திரைப்படம். பிரபல இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலி இயக்கும் இந்தத் திரைப்படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’, நவராத்திரியின் தொடக்க நாளில் வெளியானது. ஆரம்பம் முதலே இந்தப் படம் பற்றி பல்வேறு சர்ச்சைகள் வந்துகொண்டிருக்கின்றன. ராணி பத்மாவதியின் சரித்திரத்தைத் திரித்து, தவறாக எடுப்பதாகப் பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. மேலும், திரைப்படத்தின் கதாநாயகி தீபிகா படுகோனுக்கு எதிராக விமர்சனங்களும் கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டன.

இந்நிலையில், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த ‘பத்மாவதி’ திரைப்படம், வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்றொரு செய்தி பரவியது. இதையடுத்து, படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அஜித் அந்தாரே வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ 'பத்மாவதி' திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்ற கருத்து ஆதாரமற்றது. சஞ்சய் லீலா பன்சாலிக்கும் தீபிகாவுக்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதந்த அரசாங்கத்தை நாம் பாராட்டியே ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.


We must appreciate that government has really gone out of the way to provide security to Sanjay &; Deepika. Thanks @smritiirani @Dev_Fadnavis
— Ajit Andhare (@AndhareAjit) November 17, 2017