[ad_1]







சேலம் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறும் மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியை, சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் சேலம் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ., சத்திவேல் ஆகியோர் தொடங்கிவைத்தார்கள்.


சேலம் காந்தி ஸ்டேடியம் உள் விளையாட்டு அரங்கில், மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகள், மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்வார்கள். இப்போட்டியில் கலந்துகொள்ள பல வீரர், வீராங்கனைகள் வந்திருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார், ''இப்போட்டியில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, கோவை போன்ற ஆறு மாவட்டங்களிலிருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். குத்துச்சண்டை போட்டி இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறும் வீரர், வீராங்கனைகள், அடுத்த மாதம் நடைபெறும் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தேர்வுசெய்யப்பட உள்ளார்கள். சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு பல பரிசுகள் வழங்கப்பட உள்ளன'' என்றார்.


நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்துப் பேசிய சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், ''இங்கு நடைபெறும் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ள இருக்கும் வீரர், வீராங்கணைகளைப் பாராட்டுகிறேன். போட்டிகளில் கவனமாக விளையாடி வெற்றிபெற   வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்