[ad_1]
Theni: டி.டி.வி தினகரன் சம்மந்தப்பட்ட அனைத்து இடங்களிலும் நேற்று காலைமுதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகிறார்கள். பல இடங்களில் இரவைக்கடந்தும் சோதனை நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், டி.டி.வி தினகரன் ஆதரவாளரும் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான தங்கத்தமிழ்ச்செல்வனின் அலுவலக உதவியாளர் கனகராஜ் என்பவரது வீட்டில் தற்போது வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகிறார்கள்.
மாலை 3.15மணிக்கு அதிரடியாக கனகராஜ் வீட்டிற்குள் நுழைந்த அதிகாரிகள் தற்போது சோதனை நடத்திவருகிறார்கள். இதனால் தேனி வட்டார தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த கனகராஜ் யார்என்பது பற்றி தங்கத்தமிழ்ச்செல்வன்ஆதரவாளர்கள் சிலரிடம் பேசியபோது, "கனகராஜ் என்பவர் கம்பத்தில் உள்ள தங்கத்தமிழ்ச்செல்வன் அலுவலகத்தில் வேலை பார்க்கும் உதவியாளர். குறைகளோடு தங்கத்தமிழ்ச்செல்வனை சந்திக்க வரும் தொகுதி மக்களிடம் மனுக்களை பெற்று பத்திரப்படுத்தி வைக்கக்கூடியவர் தான் கனகராஜ். அவரது வீட்டில் சோதனை செய்ய என்ன இருக்கிறது என்று தான் புரியவில்லை" என்றனர். இதனைத் தொடர்ந்து கம்பத்தில் உள்ள தங்கதமிழ்செல்வனின் அலுவலகத்தில் மூன்று அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
தங்கத்தமிழ்ச்செல்வன் உதவியாளரையும் விட்டுவைக்காத ஐடி அதிகாரிகள்!
TAGS :
COMMENTS