[ad_1]





இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி சிரிப்பு கிளப்போல் மாறிவிட்டது என்று அம்மாநிலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.




 
இமாச்சலப் பிரதேசத்தில் வருகிற 9-ம் தேதி மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சிப் பொறுப்பில் உள்ள இந்த மாநிலத்தில், ஆட்சியைப் பிடிக்க பா.ஜ.க முனைப்பு காட்டி வருகிறது. ஆட்சியைத் தக்க வைக்கும் முயற்சியில் கங்கிரஸ் கட்சியும் முனைப்பு காட்டுகிறது. இமாச்சல பிரதேச பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் மோடி பேசும்போது, “இமாச்சலப் பிரதேச முதல்வர் வீரபத்ரசிங்மீது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆனால், காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் ஊழலை ஒழிப்போம் என்று போட்டிருப்பது வேடிக்கையானது. காங்கிரஸ் கட்சி மனமகிழ் மன்றம்போல் ஆகிவிட்டது. பேய்களின் தேவபூமியில் இருந்து விடுபட இதுவே சரியான தருணம்” என்று காங்கிரஸ் கட்சியைச் சரமாரியாக விமர்சித்தார்.

- பிரதீப்
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்