[ad_1]

அன்னிய செலாவணி ஒழுங்குமுறை விதிகளை மீறியதாக பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா மீது பாட்டியாலா நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 18-ம் தேதி மல்லையா ஆஜராகவேண்டும். அப்படி ஆஜராகாதபட்சத்தில் தலைமறைவு குற்றவாளியாக விஜய் மல்லையா அறிவிக்கப்படுவார் என பாட்டியாலா நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா 1996, 1998-ல் பிரிட்டனில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டி ஒன்றில் கிங் .ஃபிஷர் லோகேவை பயன்படுத்துவதற்காக இரண்டு லட்சம் யு.எஸ். டாலர் பணம் கொடுத்திருக்கிறார். ரிசர்வ் பேங்க் அனுமதியோடுதான் அந்த பணத்தை கொடுக்க வேண்டும். ஆனால் அவர் அனுமதி பெறவில்லை. பிரிட்டன் கம்பெனிக்கும், யுரோப்பியன் கம்பெனிக்கும் அவர் கொடுத்த பணத்திற்காக அன்னியச் செலாவணி வழக்கு தொடரப்பட்டுள்ளது. 2016-ல் இருந்து அவர் தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் லண்டனில் அவர் கைதாகி, உடனே ஜாமீன் விடுதலைபெற்றார். கடந்த மாதமும் பணமோசடி வழக்கில் லண்டனில் கைதாகி உடனே விடுதலையானார். இந்தியா வந்தால் கைது செய்யப்படுவோம் என்பதால் இந்தியா வருவதை அவர் தவித்து வருகிறார். இதுவரை 6 முறை ஜாமினில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் அவருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாட்டியாலா நீதிமன்றம் டிசம்பர் 18-ம்தேதி ஆஜராக வேண்டும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆஜராகாத பட்சத்தில் தேடப்படும் குற்றவாளியாக அவர் அறிவிக்கப்படலாம்.