[ad_1]
மக்கள் குறை தீர்க்கும் நாளில் மனு கொடுக்க வருபவர்கள், தீக்குளிப்புச் சம்பவங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தீ தடுப்பு முன்னேற்பாடுகளுடன் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கடந்த மாதம் இசக்கிமுத்து எனும் கூலித் தொழிலாளி, கந்துவட்டிக் கொடுமையிலி ருந்து தன்னை மீட்க நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தீ குளித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில், தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் தீயின் கோர நாக்குகளுக்குப் பலிகொடுத்தார். திடீரென நிகழ்ந்த இந்தச் சம்பவத்திலிருந்து நால்வரையும் காக்க வழி தெரியாமல் அங்கே கூடியிருந்தவர்கள் தவித்த நிலையில், பத்திரிகையாளர்கள் சிலர் மணலை அள்ளி வீசி இசக்கிமுத்து குடும்பத்தினர் மீது பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும், நால்வரும் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இந்தச் சோக நிகழ்வை அடுத்து, தமிழகம் முழுதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறை தீர்ப்பு நாளில் மனு கொடுக்க வருபவர்கள், இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால், அதைத் தடுக்கும்நிலையில் ஏராளமான போலீஸார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், தீக் குளிப்பு போன்றவற்றில் ஈடுபடுபவர்களை மீட்கும் வகையில் மணல், தண்ணீர், கம்பளி போன்றவற்றுடன் தீ அணைப்புத்துறை ஊழியர் ஒருவரும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். பொது மக்கள் தங்களிடம் கொடுக்கும் மனுக்களின்மீது முறையான நடவடிக்கை எடுக்கத் துவங்கினால், இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அவசியம் ஏற்பட வாய்ப்பிருக்காது என்பதை அதிகாரிகள் உணர்வதன்மூலமே, நெல்லையில் நேர்ந்த கொடுமை போன்றவை நிகழாமல் இருக்கும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
ராமநாதபுரம் ஆட்சியர் வளாகத்தில் தீக்குளிப்பைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை!
TAGS :
COMMENTS