[ad_1]
''அ.தி.மு.க., கட்சியில் 16 ஆண்டுகளுக்கு மேல் இருக்கிறேன். நிரந்தரமாக 11 ஆண்டுகள் அம்மாவால் நியமிக்கப்பட்ட மாவட்ட இலக்கிய அணி இணைச் செயலாளராகவும் இருந்துவருகிறேன். ஓ.பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த ஒரே காரணத்தினால் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியால் பழி வாங்கப்பட்டு அவமானம் அடைந்துள்ளேன். இரட்டை இலை பெற்ற பிறகு இனி ஓ.பன்னீர்செல்வத்தை வைத்திருக்க மாட்டார்கள்'' என்கிறார் நாமக்கல் மாவட்ட இலக்கிய அணியின் இணைச் செயலாளர் விஜய முருகேசன்.
மேலும் இவர், ''அம்மா இறந்த பிறகு நான் ஓ.பி.எஸ். அணியில் இணைந்து நாமக்கல் மாவட்டத்தில் சுந்தரம் எம்.பி. தலைமையில் செயல்பட்டேன். பிறகு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். இணைந்தார்கள். அது பெயரளவுக்கு மட்டுமே இருந்தது. உண்மையில் ஓ.பி.எஸ்., அணியினரை புறக்கணிக்கும் சூழ்நிலை இருந்துவந்தது. என்னுடைய கல்லூரி நண்பனை 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துப் பேசினோம். அவர் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்தவர். தற்போது ஈரோடு மாவட்டத்தில் மின்சாரத்துறையில் உதவி செயற்பொறியாளராக இருக்கிறார். கும்பகோணம், ஶ்ரீவள்ளிப்புத்தூரில் காலியாக இருக்கும் இடத்துக்கு மாறுதலுக்காக அலைந்துகொண்டிருப்பதாக தெரிவித்தார். நம்ம மாவட்ட அமைச்சர் தங்கமணி மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார். அவரிடம் சொன்னால் செய்துகொடுப்பார் என்றேன்.
அதையடுத்து, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியைச் சந்தித்துப் பேசினேன். அதற்கென்ன நிச்சயம் செய்து தரேன். கும்பகோணத்துக்கு வைத்தியலிங்கம் ஆளுக்கு போட்டாச்சு. ஶ்ரீவள்ளிப்புத்தூருக்கு போட்டு விடலாம். ஆனால், லோக்கல் கட்சிக்காரரிடம் கையெழுத்து வாங்கிட்டு வரச்சொன்னார். அதையடுத்து, என் நண்பர் தேனி மாவட்டப் பொருளாளர் சின்னக்காளையிடம் பரிந்துரைக் கடிதம் வாங்கிவந்தார்.
நான், என் நண்பர் அமைச்சர் தங்கமணியை சந்தித்து பரிந்துரைக் கடிதம் கொடுத்ததும் அமைச்சர் ஒரு பரிந்துரை கடிதம் கொடுத்து உடனே சென்னையில் உள்ள மின்சாரத்துறை சேர்மன் பி.ஏ., பாலாஜியைப் போய் பார்க்க சொன்னார். உடனே பாலாஜியை பார்த்தோம். உங்களுக்கு தெரியாததில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டும் போதாது. அமைச்சர் பேசினால் உடனே மாறுதல் போட்டுக் கொடுப்பதக்ச் சொன்னார். அந்த இடத்திலேயே அமைச்சரிடம் பேசினேன். மழையில் பிரச்னை விசாரித்துக் கொண்டிருக்கிறேன். இரண்டு நாளில் பேசுறேன்னு சொன்னவர் இரண்டு வாரமாக பேசவில்லை. அமைச்சரை நேரில் சந்தித்துக் காலில் விழுந்து என் நண்பர் அவமானப்படுத்தி விடாதீங்க போட்டு கொடுங்க அமைச்சரே என்றேன். காலில் விழுந்தால் பேசிடுவேனா? உனக்கெல்லாம் போட்டுக் கொடுக்க முடியாது போ... அசிங்கப்படுத்தி விட்டார். பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்தவன் என்ற ஒரே காரணத்துக்காக என்னைப் பழி வாங்கிவிட்டார். எங்க ஐயா, பழனிசாமி அணியில் சேர்ந்திருக்கக் கூடாது. இன்று இரட்டை இலையைப் பெற்றுவிட்டார்கள். இனி பன்னீர்செல்வத்தையும் வைத்திருக்க மாட்டார்கள் கழற்றிவிட்டு விடுவார்கள்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'ஓ.பி.எஸ்-ஸை இனி வைத்துக்கொள்ள மாட்டார்கள்'- அ.தி.மு.க செயலாளர் ஆரூடம்
TAGS :
COMMENTS