[ad_1]
Salem:
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் இருசக்கர மோட்டார் வாகனம் பழுது பார்க்கும் ஒர்க்ஷாப் தொழிலுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கம் கலெக்டர் அலுவலகத்துக்கு எதிரே போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
போராட்டத்துக்கு முன்பு சேலம் கோட்டை மைதானத்திலிருந்து சுமார் 100-க்கும் மேற்பட்ட மெக்கானிக்குகள் கோரிக்கை பேரணியாக வந்து போராட்டத்தில் கலந்துகொண்டார்கள்.
இதுபற்றி சேலம் மாவட்ட மோட்டார் பைக் மெக்கானிக்குகள் சங்கத் தலைவர் குமரவேலிடம் பேசினோம், 'பைக் மெக்கானிக்குகள் தொழில் அனுபவம் அல்லது ஐ.டி.ஐ முடித்துவிட்டு வேலை கிடைக்காதபட்சத்தில், ஒரு சிறிய இடத்தை வாடகைக்கு எடுத்து மெக்கானிக் வேலை செய்கிறோம். இதில் பெரிய வருமானம் கிடையாது. இது ஒரு குடிசை தொழில்போல செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இருசக்கர மோட்டார் வாகனம் பழுதுபார்க்கும் ஒர்க்ஷாப் வைக்கக்கூடியவர்கள் சொந்தமாக 2,000 சதுர அடி நிலம் இருக்க வேண்டும். சொந்த இடத்தில் ஒர்க் ஷாப் வைத்திருக்க வேண்டும். எந்த கம்பெனி வண்டியை சர்வீஸ் செய்கிறோமோ அந்த கம்பெனியிடம் பதிவு செய்திருக்க வேண்டும்.
ஒர்க் ஷாப்பில் வேலைபார்க்கும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ., பி.எஃப்., ஒர்க் ஷாப் உரிமையாளர் போட வேண்டும். ஒர்க் ஷாப் வைப்பதற்கு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். அப்படி பதிவு செய்தவர்கள் மட்டுமே இருசக்கர வாகனங்களைப் பதிவு செய்ய முடியும். இது போன்ற பல கண்டிஷன்கள் போடப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவல்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றாலும், ஒர்க்ஷாப் பணியாளர்களை மிகவும் கவலையடையச் செய்கிறது. இது போன்ற சட்டம் வந்தால் பைக் மெக்கானிக்குள் சங்கம் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொள்ளுவோம்’ என்றார்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
`புதிய மோட்டார் வாகனச் சட்டத்தால் மெக்கானிக் தொழிலே நலிவடையும்! - சேலத்தை அதிரவைத்த போராட்டம்
TAGS :
COMMENTS