[ad_1]
மதுரை மேலூர் பகுதிகளுக்கு பெரியார், வைகை ஆற்றுநீர் திறந்துவிடப்படாததால், பெரும் அவதிக்கு ஆளாகிவருகின்றனர் . கிரானைட் முதலைகளின் மிரட்டல்களையும் தாண்டி விவசாயம் செய்துவந்த அப்பகுதியில் உள்ள ஒரு போக பாசன விவசாயிகளுக்கு, மேலும் பெரும் அடியைக் கொடுப்பதுபோல, தொடர்ச்சியாக தண்ணீர் திறக்கப்படாமல் வஞ்சிக்கப்பட்டுவருகின்றனர். இந்த ஆண்டு சற்று மழை பெய்ததால், அணைகளில் நீர் சேகரமானது.
அதனால், தங்களுக்கு இந்த ஆண்டு தண்ணீர் கிடைத்துவிடும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை நழுவவிட்டனர். கம்பம், கள்ளந்தரி முழுமை அடைந்துவிட்டது அடுத்ததாக, நமக்குதான் தண்ணீர் வரப்போகிறது என்று நினைத்தவர்களுக்கு, அதிகாரிகள் காலம் தாழ்த்தியதால் தண்ணீர் கிடைக்காமல்போனது.
இந்நிலையில், மேலூர் பகுதிகளுக்கு கிடைக்கவேண்டிய தண்ணீரை அவர்களுக்கு வழங்காமல் அரசியல் சூழ்ச்சியால் விரிவாக்கக் கால்வாய்களுக்கு தண்ணீரை வழங்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம் . இதில், துணை முதல்வர் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் இருப்பதால், அவர்களுக்கு முதலில் தண்ணீர் வழங்க பன்னீர் செல்வம் அரசியல் காய் நகர்த்திவருவதாகவும், அதற்கு ஏற்றார்ப்போல அரசு அதிகாரிகளும் நடந்துகொள்வதாகக் குற்றம் சாட்டப்பட்டுவருகிறது.
இந்நிலையில், தங்களுக்குக் கிடைக்கவேண்டிய தண்ணீரை முறைப்படி வழங்காமல், சட்ட திட்டத்துக்கு மாறாக செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்து, மேலூர் பகுதி விவசாயிகள் கடையடைப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். முறைபடி தண்ணீர் வழங்கப்பட்டால் மட்டுமே எங்களின் அடுத்தகட்ட போராட்டம் கைவிடப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர் .
தண்ணீரில் அரசியல் செய்கிறாரா பன்னீர்செல்வம்? - கொந்தளிக்கும் மேலூர் மக்கள்
TAGS :
COMMENTS