[ad_1]





உத்தரப்பிரதேசத்தில்  உள்ள உராய் மாவட்டத்தில் கழுதைகள் சிறையில் அடைக்கப்பட்ட விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.


 


உராய் மாவட்டத்தில் உள்ள சிறை வளாகத்தில் ஐந்து லட்சம் மதிப்பிலான செடிகளை நட்டுவைத்து பராமரித்து வந்துள்ளார்  உயர் சிறை அதிகாரி ஒருவர். இந்தச் செடிகளை சில கழுதைகள் சூறையாடிமென்று தின்று நாசமாக்கிவிட்டன.  இதுகுறித்து கழுதைகளின் உரிமையாளரை எச்சரிக்கைவிடுத்துள்ளது காவல்துறை.  ஆனால், கழுதைகள் மீண்டும் செடிகளை நாசமாக்கியுள்ளன.  இதனால் ஆத்திரமடைந்த சிறை அதிகாரிகள் கழுதைகளைப் பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். 

 



 

நான்கு நாள்கள் சிறையில் அடைக்கப்பட்ட கழுதைகளை அரசியல்வாதி ஒருவரின் தலையீட்டால் விடுதலைசெய்து வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் உரிமையாளர். இந்திய வரலாற்றிலேயே கழுதைகளை சிறையில் அடைத்த பெருமை யோகி ஆதித்யநாத்தின் உ.பி அரசைதான் சேரும்.  இதுகுறித்து கழுதைகளில் உரிமையாளர் கமலேஷ் கூறுகையில், ‘என் கழுதைகளை சிறையில் இருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன். சிறைக்கு நடையாய் நடந்தேன். காவலர்கள் மனமிறங்கவில்லை. கழுதைக்கு எப்படி விலையுயர்ந்த செடிகள் என்று அடையாளம் தெரியும். கடைசியில் பா.ஜ.க வைச் சேர்ந்த சக்தி கோகாய் காவல்துறையிடம் பேசி என் கழுதைகளுக்கு விடுதலை வாங்கித் தந்தார்' என்றார்.

 



சக்தி கோகாய்

 கழுதைகளை விடுதலை செய்ய உதவிய பா.ஜ.க நிர்வாகி சக்தி கோகாயிடம் ஊடகங்கள் ‘கழுதைகளைக் கைது செய்தது குற்றம்தானே? ‘ என்று கேள்வியெழுப்பினர். ‘அப்படி ஏதும் நடக்கவில்லை. யாரோ தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர். நான் கழுதையை மீட்க சிறைக்கு வரவில்லை. என் நண்பரை சந்திக்கதான் வந்தேன்’ என்று நழுவிச் சென்றுள்ளார். 

 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");