[ad_1]
Chennai:
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகரில் மக்களுக்கு சாம்பார் சாதம், ரொட்டிகளை முதல்வர் வழங்கினார்.
நேற்றிரவு கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளக்காடானது சென்னை. சாலைகள், தெருக்கள், வீடுகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் சமுதாயக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். வடசென்னை பகுதியைப் பார்வையிட்ட முதல்வர், பின்னர் ஆர்.கே.நகர் தொகுதிக்குச் சென்றார். சென்னியம்மன் கோயில் தெருவில் மருத்துவ முகாமை முதல்வர் பார்வையிட்டார். முதல்வருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், உதயகுமார், வேலுமணி ஆகியோர் சென்றிருந்தனர்.
இந்தப் பகுதியைப் பார்வையிட்ட பின்னர் முதல்வர் பழனிசாமி முடிச்சூர் மற்றும் நாராயணபுரம் ஏரி அருகில் கால்வாயைச் சரிசெய்யும் இடத்தைப் பார்வையிட உள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
மழையால் பாதித்த மக்களுக்கு சாம்பார் சாதம், ரொட்டி வழங்கினார் முதல்வர் பழனிசாமி!
TAGS :
COMMENTS