[ad_1]
டெல்லியில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் நாளை துவங்கி 22-ம் தேதி வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளனர். இதற்காக நாடு முழுவதும் இருந்து விவசாயிகள் தலைநகர் டெல்லியில் குவிந்து வருகிறார்கள்.
விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாய விளைபொருள்களுக்கு நியாயமான விலை நிர்ணயம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் மூன்று நாள்கள் டெல்லியில் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். நாடு முழுவதும் இருந்து 182 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் இதில் பங்கேற்க உள்ளனர். இதற்காக டெல்லியில் விவசாயிகள் குவிந்து வருகிறார்கள்.இது பற்றி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறும்போது, “பிரதமர் மோடி தேர்தலின்போது 'நான் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக்குவேன்' என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாட்டில் விவசாயிகள் தற்கொலையும் குறையவில்லை. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவோடு 50 சதவிகித விலை வைத்து வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறோம். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துகிறோம்” என்றனர்.நாளை டெல்லியில் விவசாயிகள் நாடாளுமன்றம் நடைபெறுகிறது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
டெல்லியில் குவியும் விவசாயிகள்...! மூன்று நாள்கள் தொடர் போராட்டம் நடத்த திட்டம்
TAGS :
COMMENTS