[ad_1]

மத்திய நிதித்துறை செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார் ஹஸ்முக் அதியா. இவர் இந்திய வருவாய் துறை செயலாளராக பணியாற்றி வந்தார். இவரது பதவி உயர்வுக்கான உத்தரவை மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித்துறை பிறப்பித்துள்ளது. மத்திய நிதித்துறை செயலாளராக இருந்த அசோக் லவாசா ஓய்வு பெற்றுவிட்டதால், நிதித்துறை செயலாளர் பதவி காலியாகவே இருந்தது. இந்நிலையில், அப்பதவிக்கு அதியா நியமிக்கப்பட்டிருக்கிறார். மத்திய அரசின் நியமன கமிட்டி இவரது பதவி உயர்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 

1981-ல் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பொறுப்புக்கு வந்தவர் அதியா. குஜராத் கேடரில் பணியாற்றி பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துவந்தார். தற்போது, இவரது கட்டுப்பாட்டுக்கு கீழ் ஐந்து முக்கியத்துறைகள் வருகின்றன. நிதி சேவைகள், பொருளாதார விவகாரங்கள், வருவாய், முதலீடு, செலவின விவகாரங்கள் ஆகிய துறைகளை அதியா நிர்வகிக்க உள்ளார்.  மேலும், மத்திய வர்த்தகத் துறை செயலாளராக ஐ.ஏ.எஸ் அதிகாரி பினோய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவும் வெளியிடப்பட்டு இருக்கிறது.