[ad_1]







மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், தென்தமிழகத்தின் முதல்  இருதய  மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறார்கள். அந்த அறுவைசிகிச்சையை சிறந்த முறையில் செய்துமுடித்த  மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள் பாராட்டப்பட்டு, சான்றிதழ்களையும்  நினைவுப்பரிசுகளையும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். 



மேலும் அவர், "உற்சாகப்படுத்தும்போதுதான் வெற்றி என்பது நிறைவுபெறும். கூலித் தொழிலாளி செளந்தரபாண்டியன் என்பவருக்கு சிறந்த முறையில் இருதய மாற்று அறுவைசிகிச்சைசெய்து வெற்றியைக் கண்ட உங்களை நெஞ்சார வாழ்த்த கடமைப்பட்டுள்ளேன். தென்தமிழகத்தில் கார்ப்பரேட் மருத்துவமனைகள்கூட செய்ய முடியாத இந்த மிகப்பெரும் காரியத்தை அரசு ராஜாஜி மருத்துவமனை செய்துமுடித்திருக்கிறது. தலைநகரத்தை ஓவர் டேக் செய்வதுபோல, மதுரை அரசு மருத்துவமனை தொடர்ந்து செயல்பட்டுவருவது, மகிழ்ச்சியான விஷயம் . தமிழகத்தில், கடந்த 2 மாதத்தில் சீ.டி ஸ்கேன்கள், எம்.ஆர்.ஐ ஸ்கேன்கள் வசதி அதிக அளவு செய்து தரப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளுக்கு சுமார் 15 கோடி ரூபாய்க்கு மேல் ஒதுக்கீடுசெய்யப்பட்டது. ஜெய்க்கா திட்டத்தின்மூலம், மருத்துவமனைகளின் வசதிகள் மேம்படுத்தப்படும் .சுமார் 2600 கோடி வங்கியிடமிருந்து பெற்று, தமிழக மருத்துவம் மேம்படுத்தப்பட உள்ளது . முன்னாள் முதல்வர் அம்மா அவர்கள் சொன்னதுபோல, தமிழக மருத்துவமனைகளைப் பிற மாநிலங்களோடு ஒப்பிட வேண்டாம். பிற நாடுகளோடு ஒப்பிட்டு, அதற்குப் போட்டியாக நாம் நம் மருத்துவப் பணியை சிறந்த முறையில் ஆற்றவேண்டும்” என கேட்டுக்கொண்டார் . மேலும், இந்த பாராட்டுவிழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செல்லூர் ராஜுவும் மருத்துவக்குழுவை பாராட்டிப் பேசினார் .
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");