[ad_1]





கும்பகோணத்தை அடுத்துள்ள பாபநாசத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி நஷ்டம் ஏற்பட்டதால் பெண் ஒருவர் தானும் தற்கொலைக்கு முயன்று, மகன், மகளுக்கும் விஷம் கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 




தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அடுத்துள்ள வளத்தமங்கலம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மனைவி  கலைச்செல்வி கடந்த 2010-ம் ஆண்டு ஹெச்பிஎன் என்ற தனியார் சேமிப்பு நிறுவனத்தை ஆரம்பித்து, நடத்தி வந்தார். இதில், ஐந்தாயிரம் உறுப்பினர்கள் வரை உறுப்பினர்களாக சேர்ந்து பணத்தை சேமித்து வந்தனர். திருச்சி, திருவாரூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் கிளைகள் தொடங்கி நடத்தப்பட்டு வந்தன. கலைச்செல்வி ஏஜென்டாக கீழ் உள்ள 114 பேர் உறுப்பினர்கள் இருந்துள்ளனர். 


இந்த நிதி நிறுவனம் 2012-ல் திடீரென திருச்சி, திருவாரூர், சென்னை ஆகிய பகுதிகளில் கிளைகள் மூடின. பணத்தை கட்டிய உறுப்பினர்கள் கலைச்செல்வியிடம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் மனமுடைந்த கலைச்செல்வி மகன், மகளுக்கு பூச்சி மருந்து கொடுத்து, அவரும் பூச்சி மருந்து குடித்ததால் உயிருக்கு ஆபத்தான நிலையில் கும்பகோணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்  சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.     
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");