[ad_1]

தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய இரண்டாவது மாநாடு மதுரையில் கடந்த மூன்று நாட்களாக நடந்து வருகிறது. இதில் இந்தியா முழுவதும் இருந்து சாதி ஒழிப்பு போராளிகள், முற்போக்கு செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
மாநாட்டு இறுதி நாளான இன்று பழங்கா நத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் திரைப்பட இயக்குநர் ரஞ்சித் உட்பட பல ஆளுமைகள் கலந்து கொண்டனர். சிறப்புரை ஆற்ற கேரள முதல்வர் பினராயி விஜயன் வந்திருந்தார்.
அவர் பேசும்போது, "வர்க்க போராட்டம் வெற்றி பெற சாதி ஒழிப்பு போராட்டத்தை நடத்த வேண்டும். கேரளாவில் சாதி ஒழிப்பிலும், தீண்டாமை அகற்றும் நடவடிக்கையிலும் இடது முன்னணி செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு நடவடிக்கை தான் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டமாகும். ஜோதிராவ் பூலே, தந்தை பெரியார், நாராயண குரு போன்றோரின் வழியில் இடதுசாரிகள் இயக்கம் சாதி ஒழிப்பில் செயல்பட்டு வருகிறது. சாதி ஒழிப்புக்காக எந்த அமைப்பு போராட்டம் நடத்தினாலும் நாங்கள் இணைந்து போராடுவோம்" என்றார்.