[ad_1]





Salem: 

சேலம் கலெக்டர்  ரோகிணி  அதிரடி நடவடிக்கையால் மாவட்ட மக்களுக்குப் பல நன்மைகளைச் செய்து வருகிறார். இன்று 'மை சேலம்' என்ற புதிய ஆப் அறிமுகம் செய்துள்ளார். இந்த ஆப் மூலமாகப் பொதுமக்கள் தங்கள் புகார்களைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை சந்திக்காமலேயே தெரிவிக்கலாம். மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள், அறிவிப்புகள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதுப்பற்றி சேலம் கலெக்டர் ரோகிணி, ''அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கும் இக்காலத்தில் தற்போது வரை பொதுமக்கள் ஒவ்வொரு விஷயத்திற்காகவும் அதிகாரிகளை க்யூவில் நின்று சந்தித்து துறை ரீதியான சந்தேகங்கள், புகார்கள் கொடுக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு கால விரையம் ஏற்பட்டுவதோடு பொதுமக்களின் புகார்களுக்கு பதில் கிடைத்துள்ளதா? என்பதையும் அறிந்துக் கொள்ள முடிவதில்லை. அதை தீர்க்கும் விதத்தில் இன்று ''மை சேலம்'' என்ற புதிய ஆஃப் உருவாக்கப்பட்டிருக்கிறது.இந்த ஆப் மூலமாகப் பொதுமக்கள் புகார்கள் தெரிவிப்பதோடு மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அறிவிப்புகளை அறிந்துகொள்ள முடியும். பொதுமக்கள் தங்களின் அவசர கால கோரிக்கைகளைப் பதிவு செய்து அரசின் உடனடி நிவாரணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள், சுற்றுலாத் தளங்கள் மற்றும் அரசு இணையதளங்கள் குறித்த விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.அரசு நலத்திட்ட விவரங்களை முழுவதுமாக அறிந்துகொள்ளலாம். அனைத்து அரசு துறைகளின் தொடர்பு எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த ஆப் பொதுமக்களுக்கு மட்டுமின்றி, பத்திரிகையாளர்களுக்கு ரொம்ப பயனுள்ளதாக இருக்கும்'' என்றார்.



இதுபற்றி அருகில் இருந்த விவசாயிடம் கேட்டதற்கு, ''கலெக்டர் அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறைக்கு மனு கொடுக்க வர வேண்டும் என்றால் ஒரு நாளே ஆகிவிடும். இதனால் ஒரு நாள் பொழப்பே போய்விடுகிறது. எங்க மகன், மகளிடம் இல்லையென்றால் பக்கத்து வீட்டில் படித்தவர்களிடம் இந்த ஆப் டவுண்லோடு செய்யச் சொல்லி எங்களுடையப் புகார்களை ஓய்வாக இருக்கும் நேரத்தில் அனுப்பச் சொல்லுவோம். இது எங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்