[ad_1]







திருச்சி பிராட்டியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திருச்சி  லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அதிரடி சோதனை நடத்தியதில், கட்டுகட்டாக பணம் சிக்கியது.

 

திருச்சி பிராட்டியூரில் உள்ளது மாவட்ட போக்குவரத்து ஆணையர் அலுவலகம். இந்த அலுவலகத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்காணோர் வாகனங்கள் பதிவு, லைசென்ஸ் எடுப்பது உள்ளட்ட பல விஷயங்களுக்காக  தினசரி வந்துபோவார்கள். மேலும் இந்த அலுவலகத்தில் அனைத்துப் பணிகளுக்கும் லஞ்சம் பெறுவதாகவும் புரோக்கர்கள் தலையீடு அதிகம் உள்ளதாகவும், அனைத்துக்கும் கமிஷன், லஞ்சம் இல்லாமல் எந்த காரியமும் நடக்காது என்றும் முகவர்களின் மூலம் வசூல் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.அதுமட்டுமல்லாமல், அரசு நிர்ணயித்த கட்டணத்துக்கு மாறாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நேற்று மாலை திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில், ஆய்வாளர்கள் சக்திவேல், சேவியர்ராணி குழுவினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி என்பவர்  தன்னிடம் இருந்தப் பணத்தை வீசி எறிந்தார்.அதனால் அங்கு பரபப்பு நிலவியது.

 

அப்போது கணக்கில் வராத ரூபாய் 1.37லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அது குறித்து விளக்கம் கேட்டு அதிகாரிகள், ஊழியர்கள், முகவர்களிடம்  லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணை நள்ளிரவு வரை தொடர்ந்தது. இறுதியாக  இச்சோதனையில், மோட்டார் வாகன ஆய்வாளர் நல்லதம்பி வீசி எறிந்த தொகை ரூபாய் 17000 மற்றும் தனது பையில் வைத்திருந்த ரூபாய் 30000,  8 புரோக்கர்களிடம் நடத்திய விசாரணையில் 6 புரோக்கர்களிடமிருந்த ரூபாய் 9 ஆயிரம் என மொத்தம் கணக்கில் வராத ரொக்கம் 1லட்சத்து 37ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

 

 சமீபகாலமாக திருச்சியில் உள்ள திருச்சி கிழக்கு மற்றும் ஸ்ரீரங்கம் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் நடத்தி லஞ்சப் பணம் பறிமுதல் செய்துவந்தநிலையில், தற்போது திருச்சி பிராட்டியூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திருச்சி  லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்