[ad_1]
Thoothukudi: தமிழகத்தில் தற்போது நடைபெற்றுவரும் வரிமான வரித் துறையினரின் சோதனை வரவேற்கத்தக்கது. இந்தச் சோதனை முடிவல்ல தொடக்கம்தான்’ என தூத்துக்குடியில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனாரின் 81-ம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்திலுள்ள வ.உ.சிதம்பரனாரின் இல்லத்திலுள்ள சிலைக்கு மாலை அணிவித்து, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மரியாதைசெய்தார். மேலும், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் முன் உள்ள சிலைக்கும் அவர் மாலை அணிவித்தார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’தமிழகத்தின் கடல்வழி நுழைவு வாயிலான இந்த தூத்துக்குடியில்தான், வ.உ. சிதம்பரனார், ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கப்பல் விட்டார். உலக வர்த்தகத்திலும், இந்தியாவிலுள்ள அனைத்து துறைமுகங்களைக் காட்டிலும் தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம்தான் பல சாதனைகளைப் படைத்துவருகிறது. துறைமுகப் பகுதியில் ரூ.3,000 கோடி செலவில் கடல் ஆழப்படுத்தும் பணி நடந்துவருகிறது. இன்னும் 3 ஆண்டுகளில் இப்பணி முடிவடையும். இப்பணி முடிவடைந்தால், தற்போது கையாளப்பட்டுவரும் 60 ஆயிரம் டன் சரக்குகளை இரு மடங்காக்கி 1.20 லட்சம் டன்களைக் கையாள முடியும். வ.உசி-யின் பெயரில் உள்ள தூத்துக்குடி துறைமுகத்தின் சார்பில், அவரது அடுத்த நினைவு தினத்திற்குள் ரூ.1 கோடி செலவில், அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியை சுற்றுலா மையமாக ஈர்க்கும் வகையில் அந்த அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
போயஸ் கார்டனில் நடந்த வருமான வரிச்சோதனை பல காலம் திட்டமிடப்பட்டு, ஆதாரத்தின் அடிப்படையில்தான் நடந்துள்ளது. இதில் எவ்விதமான அரசியல் உள்நோக்கமும் இல்லை. அந்தப் பணம் அனைத்துமே ஒட்டுமொத்த தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம்தான். மக்களை ஏமாற்றி சதி செய்தவர்களுக்கு விதிக்கப்பட்ட விதிதான் இச்சோதனை. தமிழகத்தில் நடந்து வரும் வருமான வரிச் சோதனைகள் அனைத்தும் வரவேற்கத்தக்கதுதான். இந்தச் சோதனைகள், தொடக்கம்தானே தவிர முடிவல்ல. தவறு நடந்த இடம் அனைத்திலும் சோதனை நடத்தப்பட வேண்டும்.
மாநிலத்தின் அனைத்துப் பணிகளையும் ஆளுநர் ஆய்வுசெய்வதற்கு அதிகாரம் உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்தால், அரசுக்கு கூடுதல் ஆலோசனைகளை வழங்க முடியும் என்பதால்தான் அவர், மாவட்டங்களில் ஆய்வுசெய்துவருகிறார். அவர், சட்டவிதிகளுக்கு மாறாகச் செயல்படவில்லை. எந்தவித ஆணைகளையும் ஆளுநர் பிறப்பிக்கவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை கழகங்கள் இல்லாத சூழல் வேண்டும். கழகம் இல்லாத ஆட்சிதான் மாற்றத்தைத் தரும்’ என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
’வருமான வரிச் சோதனை முடிவல்ல... தொடக்கம்தான்!’ - பொன்.ராதாகிருஷ்ணன்
TAGS :
COMMENTS