[ad_1]

Chennai: டெல்லியில் நவம்பர் 20 முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள அகில இந்திய விவசாயிகள் மாநாட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.






டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் 20-ம் தேதி முதல் 3 நாள்கள் விவசாயிகள் நாடாளுமன்றம் என்ற பெயரில், அகில இந்திய விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதுமிருந்து 172 விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் விவசாயம் சார்ந்த கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளன. முன்னதாக அகில இந்திய அளவில் விவசாயிகள் போராட்டக்குழு ஏற்படுத்தப்பட உள்ளது. 
இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு ஆதரவாக நடிகர் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார். அதுசம்பந்தமான விழிப்பு உணர்வு பதாகை ஒன்றை ஏந்தியபடி தான் நிற்கும் படம் ஒன்றை நடிகர் கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். “விவசாயிகளுக்கு கடன் படாதவர் யார். அவர்கள் குரல் வலுப்பெறச் செய்யுங்கள்” என்றும் நடிகர் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விவசாயிகள் தேசிய அளவில் பேராட்டக்குழு ஏற்படுத்துவதற்கு ஏற்கெனவே நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்திருந்தார்.

!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");