[ad_1]





Coimbatore: ஆளுநர் ஆய்வை, டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என கோவையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.




 

கோவைக்கு, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக வந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு வளர்ச்சிப் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வு, தமிழகத்தில் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது. குறிப்பாக, ஆளுநரின் செயல்பாடு மாநில சுயாட்சி உரிமையைப் பறிக்கும் விதமாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் கொந்தளித்துவருகின்றன.

ஆனால், ஆளுநரின் செயல்பாட்டில் தவறில்லை. இது ஆரோக்கியமான ஒன்றுதான் என அ.தி.மு.க அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க பிரமுகர்கள் கருத்துத் தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், கோவையில் வரும் டிசம்பர் 3-ம் தேதி, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

இதையொட்டி, விழா நடைபெற உள்ள வ.உ.சி மைதானத்தை ஆய்வுசெய்ய வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "கோவை ஸ்மார்ட் சிட்டி என்பதால் ஆளுநர் ஆய்வுசெய்துள்ளார். இதில் தவறு ஏதுமில்லை. இதனால், மாநில உரிமையும் பறிபோகவில்லை. ஜெயலலிதா இருந்தபோது, ஆளுநர் ஆய்வு செய்திருந்தாலுமே இது தவறில்லை. ஆளுநரின் ஆய்வை ஜெயலலிதா ஏற்றுக்கொண்டிருப்பார். எனவே, ஆளுநரின் ஆய்வை டேக் இட் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.


கோவையில், ஒரு வாரமாக காலில் காயத்துடன் சுற்றித்திரிந்து, பின்னர் வனத்துறையின் சிகிச்சை பலனின்றி யானை உயிரிழந்ததுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பிறப்பதும் இறப்பதும் இயல்பான ஒன்று. இதில் வனத்துறையின்மீது எந்தத் தவறும் இல்லை" என்று திண்டுக்கல் சீனிவாசன் பதிலளித்தார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");