[ad_1]
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பல அதிரடி மாற்றங்களை ஏற்படுத்த ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முடிவு செய்துள்ளனர். சோதனைக் காலத்தில் தங்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் பல அணிகள் உதயமாகின. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், தீபா என உருவெடுத்த அணிகளால் கட்சித் தொண்டர்கள் மதில்மேல் பூனையாகக் காணப்பட்டனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இரட்டை இலைச் சின்னத்துக்கு உரிமைகோரினர். இதனால் கட்சியும், சின்னமும் முடக்கப்பட்டன. பின், சின்னத்தை மீட்டெடுக்க முயற்சிகள் நடந்தன. இந்தச் சூழ்நிலையில் சசிகலா தலைமையில் செயல்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் திடீரென மனம்மாறி, ஓ.பன்னீர்செல்வத்துடன் சில மாதங்களுக்கு முன்பு இணைந்தனர். அதன்பிறகு இருதரப்பினரும் ஒருங்கிணைந்து சின்னத்தை மீட்டெடுக்கப் போராடினர். அதற்கு இடையூறாக சசிகலா, தீபா அணியினர் பலதடைகளை ஏற்படுத்தினர்.
இந்தச் சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு இரட்டை இலைச் சின்னம் ஒதுக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் இனிப்புகளை வழங்கி உற்சாகத்தில் உள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்குக் கட்சியினரிடையே இருந்து நெருக்கடிகள் வரத்தொடங்கியுள்ளன. தங்களுக்குக் கட்சியில் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பலர் வைத்துள்ளனர். அவர்களிடம் எல்லாம் இரட்டை இலைச் சின்னம் கிடைத்த பிறகு பார்க்கலாம் என்ற நம்பிக்கை கொடுக்கப்பட்டது. சின்னம் கிடைத்தவுடன் பதவியைக் கேட்டு தூதுவிடும் படலம் தீவிரமடைந்துள்ளது. பதவி கேட்பவர்களிடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடியட்டும் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சொல்லிவருகின்றனர்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆளுங்கட்சியின் அதிகாரமிக்க மூத்த நிர்வாகி ஒருவர், "அ.தி.மு.க.வின் சோதனைக்காலம் முடிவடைந்துவிட்டது. சசிகலா குடும்பத்தினருக்கும் கட்சிக்கும் இனி எந்தவித தொடர்பும் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகளிடம் கட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது. சின்னம் கிடைத்த மகிழ்ச்சியோடு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளோம். ஒருங்கிணைப்புக் குழுவின் முடிவுப்படி வேட்பாளர் அறிவிக்கப்படுவார். அந்தத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டால் மக்களும் அவருக்குத் தகுந்தபாடம் புகட்டுவார்கள். அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்ட சோதனைக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு உறுதுணையாக இருந்து, கட்சியில் பிளவு ஏற்படாமல் வழிநடத்தியவர்களுக்குக் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களின் ஆதரவாளர்களுக்கும் கட்சிப்பதவி வழங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கட்சிப் பதவிக்காக பலர் கடிதம் கொடுத்துள்ளனர். அதை பரிசீலித்து விரைவில் கட்சிப்பதவிகள் வழங்கப்படும். அதோடு அ.தி.மு.க.வை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்கிடையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் நிச்சயம் வெற்றி பெறுவோம். அதன்பிறகு அ.தி.மு.க.வில் கட்சிப் பதவிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படும். அதில், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். அமைச்சர்கள் சிலரை மாற்றவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பான அறிவிப்பும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்குப்பிறகு வெளியிடப்படும்" என்றார்.
அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், “எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்தபிறகும்கூட சசிகலா குடும்பத்தினரின் ஸ்லீப்பர்செல்ஸ் போல சில அமைச்சர்கள் செயல்பட்டுவந்தனர். அவர்களுக்குத்தான் விரைவில் கல்தா கொடுக்கப்படவுள்ளது. இனி அவர்கள் மூலம் ஆட்சிக்கு எந்தவித சிக்கலையும் ஏற்படுத்த முடியாது. அந்த அமைச்சர்கள் யாரென்று அவர்களுக்கே தெரியும். அவர்களுக்குப் பதிலாக மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அமைச்சரவை மாற்றம் உறுதிசெய்யப்பட்ட நிலையில் அமைச்சர் பதவியைப் பெற இப்போதே பலர் காயை நகர்த்திவருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு வேண்டப்பட்டவர்களிடம் அமைச்சர் பதவிக்காகப் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்” என்றனர்.
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
‘ஆர்.கே.நகர் தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றம்!’ - களையெடுக்க ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். தயார்
TAGS :
COMMENTS