[ad_1]
”மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாகக் காத்திருக்கின்றனர்” என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் தினகரன் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளிலும், அவர்களுக்குச் சொந்தமான நிறுவனங்களிலும் மூன்றாம் நாளான இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர். சசிகலாவின் சகோதரர் திவாகரனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான இடங்களில் எனக் கிட்டத்தட்ட 180 இடங்களுக்கும் மேல் நேற்று சோதனை நடந்தது. திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான நிறுவனங்கள், அங்கு பணியாற்றும் மேலாளர், ஊழியர்களின் வீடுகள் எனத் தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, தஞ்சை என மொத்தம் 105 இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இது தவிர ஹைதராபாத், பெங்களூரு, டெல்லி என 82 இடங்களில் நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது. மூன்றாவது நாளாக இன்று சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தொடர் சோதனை நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறுகையில், “ஒரு அணியை பத்து அணியாகப் பிரித்துவிட்டு ஒரு அணியில் மட்டும் தற்போது சோதனை நடந்து வருகிறது. மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள் பதுங்கிய புலிகளாகக் காத்திருக்கின்றனர்” எனக் கூரினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
'மோடியால் பாதிக்கப்பட்ட மக்கள்!' - விளாசும் திருநாவுக்கரசர்
TAGS :
COMMENTS