[ad_1]
கோவையில், பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள், பேப்பர் தட்டுகளாக விற்பனை செய்யப்படும் சம்பவம் சர்ச்சையை எழுப்பியுள்ளது.
கோவை காந்திபுரத்தில், பேப்பர் தட்டுகளை மொத்தமாக விற்பனை செய்யும் கடைகளில், பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை படிவங்கள், பேப்பர் தட்டுகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. கோவையைச் சேர்ந்த ஒருவர் அண்மையில், ஒரு நிகழ்ச்சிக்காக, காந்திபுரத்தில் பேப்பர் தட்டுகளை வாங்கியுள்ளார். இதையடுத்து, அந்தத் தட்டுகளில் ஏதோ எழுத்துக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. அதைப் படித்து பார்த்தபோது, அது பா.ஜ.க-வின் உறுப்பினர் சேர்க்கை படிவம் எனத் தெரியவந்தது.
குறிப்பாக, அதில் பெயர், தந்தைப் பெயர், முகவரி, வாக்காளர் அடையாள அட்டை எண் , ஆதார் எண் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன. பா.ஜ.க-வின் 2015-2020-ம் ஆண்டுக்கான உறுப்பினர் சேர்க்கை படிவங்களில் பேப்பர் தட்டு தயாரிக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க-வில் உறுப்பினராக சேர மிஸ்டு கால் கொடுக்கும் திட்டம், ஏற்கெனவே பல்வேறு விவாதங்களைக் கிளப்பியது.
இந்தப் படிவங்கள், 2014-ம் ஆண்டு, மிஸ்டு கால் திட்டம் அறிமுகப்படுத்தியபோது, அச்சிட்டப்பட்டவை எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், உறுப்பினர் சேர்க்கை படிவத்தில், பேப்பர் தட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ள சம்பவம், பா.ஜ.க தலைவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு, பா.ஜ.க நிர்வாகிகள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
பேப்பர் தட்டுகளாக மாறிய பா.ஜ.க உறுப்பினர் படிவங்கள்!
TAGS :
COMMENTS