[ad_1]
Chennai:
''எண்ணூரில் கப்பல் மோதி கடலில் எண்ணெய்க் கசிந்ததுக்கு மனித தவறுகளே காரணம்'' என்று தென் மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை எண்ணூர் துறைமுகத்திலிருந்து கடந்த ஜனவரி 28-ந்தேதி விசாகப்பட்டினம் நோக்கி எரிவாயு நிரப்பிய கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. எம்.பி.டபிள்யூ மாப்பிள் என்ற கப்பலும் மும்பையிலிருந்து துறைமுகம் நோக்கி வந்த எம்.டி.டான் காஞ்சிபுரம் என்ற எண்ணெய்க் கப்பலும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. எண்ணூர் துறைமுகத்தின் நுழைவுக் கால்வாய் அருகில் நடந்த இந்த விபத்தில் எண்ணெய்க் கப்பல் சேதம் அடைந்தது. இதில் எண்ணெய்க் கப்பலிலிருந்து வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய்க் கடலில் கலந்தது. இதனால் எர்ணாவூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான கடல் பகுதிகள் முழுவதும் எண்ணெய்ப் படலமாக மாறியது. கடல் நீரின் மேல்மட்டத்திலிருந்து சுமார் ஒரு அடி உயரத்துக்கு எண்ணெய் மிதந்தது. எண்ணூரில் தொடங்கி திருவான்மியூர் வரையில் கடல் பகுதிகள் எண்ணெயாகக் காட்சி அளித்தது. நீலக்கடல் கறுப்பு கலராக மாறியதோடு, எண்ணெய்ப் பரவியுள்ள பகுதிகளில் கடுமையான துர்நாற்றம் வீசியது. பாதிப்புக்குள்ளான இடங்களில், கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. பல நாள்கள் போராட்டத்துக்குப் பிறகு, எண்ணெய் அகற்றப்பட்டது.
இதனிடையே, எண்ணூர் கடல் பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தென் மண்டலப் பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், இது தொடர்பாகப் பதில் அளிக்க மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு தீர்ப்பாயத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அதிர்ச்சியளிக்கும் வகையில் மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை இயக்குநரகம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது. அதில், எண்ணூரில் கப்பல் மோதி கடலில் எண்ணெய்க் கசிந்ததுக்கு மனித தவறுகளே காரணம். விபத்து காலத்தில் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி மாலுமிகளுக்கு போதிய பயிற்சியில்லை. கப்பல் இயக்கும் குழுவில் விபத்தை கட்டுப்படுத்தும் அளவுக்குப் போதுமான ஆட்கள் இல்லை.
எந்த டாங்கியில் கசிவு என்பதைக் கப்பல் நிர்வாகத்தால் சரியாகக் கணிக்கமுடியவில்லை. டாங்கியிலிருந்து 2 டன் எண்ணெய் மட்டுமே கசிந்ததாகத் தவறாகக் கணக்கிட்டுள்ளனர். இரண்டு கப்பல்களை இயக்கியவர்களின் கவனக்குறைவுதான் விபத்துக்கு முழுக்காரணம். இரண்டு கப்பல்களை இயக்கியவர்களும் அடுத்த கப்பலை பார்க்கவில்லை. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறை விதிகள் முறையாகப் பின்பற்றவில்லை" என்று கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
எண்ணூர் எண்ணெய்க் கழிவு! மத்திய அரசு அதிர்ச்சி அறிக்கை
TAGS :
COMMENTS