[ad_1]





Theni: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது, கும்பக்கரை அருவி. வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அருவிக்கு விடுமுறை நாள்கள், வார இறுதி நாள்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். அதேபோல, கார்த்திகை மாதம் முதல் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள், தினந்தோறும் அருவிக்கு வந்து குளித்துவிட்டுச் செல்வார்கள். சிலர், கும்பக்கரை அருவியில் குளித்துவிட்டுதான் சபரிமலைக்கே செல்வார்கள்.




இந்நிலையில், கடந்த மாதம் கும்பக்கரை அருவியில் உள்ள பாதுகாப்புக் கம்பி பழுதடைந்து, வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் கிடப்பதை, நாம் செய்தியாகப் பதிவுசெய்திருந்தோம். அதைக் கருத்தில்கொண்டு, வனத்துறையின் உடனடி நடவடிக்கைமூலம் பாதுகாப்புக் கம்பியைச் சரிசெய்தது. இதனால், இன்று அருவியில் பாதுகாப்பாக குளிக்கமுடிகிறது. நேற்று முதல் கும்பக்கரை அருவிக்கு ஐயப்ப பக்தர்கள் வருகிறார்கள். இன்னும் நாள்கள் செல்லச்செல்ல எண்ணிக்கை அதிகமாகும். அதனால், அருவியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவது அவசியமாகும்.




மேலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதியை வனத்துறை செய்திருந்தாலும், குடிநீர் வழங்கும் தானியங்கி இயந்திரம் பழுதடைந்து கிடக்கிறது. உடனே இயந்திரத்தைப் பழுது நீக்கி, குடிநீர் வசதியை ஏற்படுத்தினால், அருவிக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பேருதவியாக இருக்கும். மேலும், கூட்ட நெரிசல் ஏற்படாமல் உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில், ஐயப்ப பக்தர்கள் மட்டுமன்றி, சுற்றுலாப்பயணிகளும் அருவியில் குளிக்க முடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இது தொடர்பாக, உடனே வனத்துறை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்







!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');

fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");