[ad_1]
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும். கனவை நனவாக்க, மலையையே புரட்டிப்போடவேண்டியதிருக்கும். வெற்றிபெற வேண்டும் என்ற தாகமும், இலக்கை நோக்கி ஓடுவதும், தோல்விகளைத் தாங்கிக்கொள்ளும் மனோபலமும் இருந்தால் வெற்றி நிச்சயம். அப்படித்தான் தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும்கொண்ட சிவசுப்ரமணியம், இன்று ஐ.பி.எஸ் அதிகாரி ஆகியிருக்கிறார். தன் லட்சியத்தை எட்ட சிவசுப்ரமணியம் அடித்த குட்டிகர்ணங்கள் கொஞ்சநஞ்சமல்ல. தற்போது, ஒடிஸாவில் எஸ்.பி-யாகப் பணியாற்றிவரும் அவரின் கதை சுவாரஸ்யமானது.
விழுப்புரம் மாவட்டம் நெமூர் கிராமத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியத்துக்கு, சிறுவயது முதலே ஐ.ஏ.எஸ் அல்லது ஐ.பி.எஸ் அதிகாரியாக வேண்டும் என்பது கனவு. தந்தை காளிரத்னம், சாதாரண விவசாயி. மூத்தமகன் இளையராஜாவை, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சேர்த்திருந்தார். முதல் மகனைப் படிக்கவைக்கவே காளிரத்னம் தடுமாறிக்கொண்டிருக்கையில், பத்தாம் வகுப்பு முடித்த சிவசுப்ரமணியத்தை கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்க முடியாத நிலை. சிவசுப்ரமணியத்தின் முதல் கனவு பட்டப்படிப்பு. அதுவே தகர்ந்துபோனது.
சிவசுப்ரமணியத்தை கடலூரில் உள்ள ஐ.டி.ஐ ஒன்றில் சேர்த்தார் காளிரத்னம். ஐ.டி.ஐ படித்துவிட்டு அசோக் லேலண்ட் நிறுவனத்தில் அப்ரன்டீஸ் வேலை கிடைத்தது. `இனிமேல் எங்கே போலீஸ் அதிகாரி ஆவது... அவ்வளவுதான்' என நினைத்துக்கொண்டார். கிடைத்த வேலையில் கவனம் செலுத்தினார். இந்தச் சமயத்தில், சிவசுப்ரமணியத்தின் உறவினரான ரமேஷ் என்பவர், தொலைதூரக் கல்வி வழியே பட்டம் பெற்று, 1999-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் தேர்ச்சிபெற்றார். சிவசுப்ரமணியத்துக்குள் உறங்கிக்கொண்டிருந்த கனல், மீண்டும் பற்றிக்கொண்டது. `நாமும் அஞ்சல் வழியில் படித்தால் என்ன..' சிவசுப்ரமணியத்தின் மனம் சிந்தித்தது. உடனடியாக செயலிலும் இறங்கினார். தொலைதூரக் கல்வி வழியாக ப்ளஸ் டூ முடித்ததோடு, பி.ஏ பட்டமும் பெற்றார்.
பின்னர், விழுப்புரத்தில் உள்ள செல்ஃப் ஸ்டடி சென்டரில் இணைந்து சிவில் சர்வீஸஸ் தேர்வுக்குத் தன்னைத் தயார்படுத்தத் தொடங்கினார். 2006-ம் ஆண்டு முதன்முறையாக சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதினார். வெற்றி கிடைக்கவில்லை. பின்னர், சென்னை அண்ணாநகரில் சிவில் சர்வீஸஸ் பயிற்சி மையத்தில் சேர்ந்து தன்னை முழுவீச்சில் தயார்படுத்தினார். இத்தனைக்கும் அந்தச் சமயத்தில் அப்ரன்டீஸாகப் பணிபுரிபவர்களுக்குச் சம்பளம் வெகு சொற்பமே! எனினும், வாழ்க்கையில் வெற்றிபெற வேண்டுமென்ற லட்சியம் சிவசுப்ரமணியத்தை உழைக்கவைத்தது. வெற்றிக்கான போராட்டத்தையும் நடத்தவைத்தது.
2006-ம் ஆண்டு திருச்சியில் உள்ள ரயில்வே பணிமணையில் அவருக்கு வேலை கிடைத்தது. வேலை செய்துகொண்டே சிவில் சர்வீஸஸ் தேர்வுகளை எழுதத் தொடங்கினார். முதல் பாடமாக புவியியலையும், இரண்டாம் பாடமாக தமிழ் இலக்கியத்தையும் தேர்வுசெய்தார். 2007, 2008-ம் ஆண்டுகளில் இரு முறை பிரிலிமினரி மற்றும் மெயின் தேர்வுகளில் பாஸான அவர், துரதிர்ஷ்டவசமாக நேர்காணலில் தேர்வாகவில்லை. இப்படி ஐந்து முறை சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதிய சிவசுப்ரமணியத்துக்கு ஆறாவது முறைதான் வெற்றி கிடைத்தது.
சிவில் சர்வீஸஸ் தேர்வில் சிவசுப்ரமணியம் தேர்ச்சிபெற, பேராசிரியர் நேபோலி என்பவர் துணையாக இருந்தார். சிவசுப்ரமணியம், தற்போது ஒடிஸா மாநிலத்தில் உள்ள போலாங்கீர் மாவட்ட எஸ்.பி-யாக பணியாற்றிவருகிறார். இன்று நாம் எண்ணும் எண்ணமே நாளை நம்மை உருவாக்கிறது என்பதற்கு, சிவசுப்ரமணியம் ஒரு சிறந்த உதாரணம்.
ஐ.டி.ஐ படித்து, விடாமுயற்சியால் ஐ.பி.எஸ் அதிகாரியாகி, இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகியிருக்கும் சிவசுப்ரமணியத்துக்கு ஒரு கிரேட் சல்யூட்!
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
ஐந்து முறை தோல்வி, இப்போது ஒடிஸாவில் ஐ.பி.எஸ்... சாதனைத் தமிழன் சிவசுப்ரமணியம்!
TAGS :
COMMENTS