[ad_1]
Chennai:
''தில்லு இருந்தா விஜயபாஸ்கர் கேஸை ஸ்பீடா நடத்துய்யா'' என்று நெட்டிசன் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, 'நடக்கும்' என்று அதிரடியாகப் பதில் அளித்துள்ளார் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா.
பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "திராவிட புரட்டுப் பூனை வெளியே: அண்ணாதுரை முதல்வர் ஆனவுடன் பள்ளிகளில் இருந்து நீதிபோதனை வகுப்புகளை ஒழித்து ஒழுக்கக்கேட்டை போதித்த ஈ.வெ.ரா கூட்டம், கிறித்தவ பள்ளிகளே ஒழுக்கம் கற்றுத் தருகின்றன என மதமாற்ற ஏஜென்ட்டாக மாறியுள்ளனர். விஜயபாஸ்கரின் பேச்சு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு நெட்டிசன் ஒருவர், "மதப் பிரச்னை, இனப் பிரச்னை எப்போ போகுதோ, அப்போது நாடு நல்லா இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள ஹெச்.ராஜா, "அதற்கு மதமாற்ற வியாபாரம் தடைசெய்யப்பட வேண்டும். மதமாற்றம் தேசிய அபாயம்" என்று கூறியுள்ளார்.
மேலும், "தில்லு இருந்தா விஜயபாஸ்கர் கேஸை ஸ்பீடா நடத்துய்யா" என்று நெட்டிசன் ஒருவர் காட்டமாகக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ஹெச்.ராஜா அதிரடியாக அளித்துள்ள பதிலில், 'நடக்கும்' என்று கூறியுள்ளார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்
!function(f,b,e,v,n,t,s)if(f.fbq)return;n=f.fbq=function()n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments);if(!f._fbq)f._fbq=n;
n.push=n;n.loaded=!0;n.version='2.0';n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];s.parentNode.insertBefore(t,s)(window,
document,'script','https://connect.facebook.net/en_US/fbevents.js');
fbq('init', '724925637619848');
fbq('track', "PageView");
'விஜயபாஸ்கரின் கேஸ் ஸ்பீடா நடக்கும்'- நெட்டிசனின் காட்டமான கேள்விக்கு ஹெச்.ராஜா அதிரடி பதில்
TAGS :
COMMENTS